Thursday, 23 October 2014

திருமணத்தடை நீங்க ஸ்ரீ ஸ்வயம்வரகலா மந்திரம்

திருமணத்தடை நீங்க ஸ்ரீ ஸ்வயம்வரகலா மந்திரம் 



களத்திர தோஷம் ,பித்ரு தோஷம், மற்றும் பல்வேறு தோஷங்களாலும்,       ஜாதகத்தில் கிரகநிலைகள் சரியின்மையாலும் ,எந்த காரணத்தினால் திருமணம் தடைபட்டு, தாமதமாகி அவதிப்படுபவர்கள் ஸ்வயம்வராபார்வதி யந்திரம் வைத்து மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நடைபெறும்.

 உமாமகேஸ்வரி  பார்வதியாக அவதரித்த போது பராசக்தியை வேண்டி இந்த மந்திரத்தைச் ஜெபம் செய்து அதன் பலனாகச் சிவபெருமானை மணந்தார்கள்.

ஸ்ரீ ஸ்வயம்வர கலா மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் யோகினி  யோகினி |
யோகேஸ்வரி யோக பயங்கரி|
ஸகல ஸ்தாவர ஜங்கம முக ,ஹ்ருதயம்|
மம வசம் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா ||

    வளர்பிறையில் திருமணம் ஆகவேண்டியவருக்குப் படுபக்ஷி இல்லாத   நல்ல நாளாகப் பார்த்து சங்கல்பம் செய்து  நைவேத்யங்கள் படைத்து விளக்கேற்றி இந்த மந்திரத்தைக் கிழக்கு அல்லது மேற்கு முகமாக      அமர்ந்து  108 தடவை ஜெபித்து வரவும்.குறைந்தது 90 நாட்கள் ஜெபம் செய்து வரவும்.விளக்கின் பாதத்தில் ஒரு மஞ்சள் தடவிய கயிறு வைத்து 90 நாட்கள் ஜெபம் கழிந்த பின்னர் அதை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும்.90 நாட்கள் ஜெபம் முடிந்ததும் ஹோமம் செய்து கொள்ள நிறைவான பலன் உண்டாகும்.ஹோமம் செய்ய முடியாதவர்கள் ஆண்களானால் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்றும் ,பெண்களானால் வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றும் அருகில் உள்ள ஏதேனும் ஒரு சாந்தமான அம்மன் கோவிலுக்கு         விளக்குக்கு எண்ணையும் அந்த தினத்தில் அம்மனுக்கு பால் அபிஷேகமும் செய்து திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாக வேண்டிக் கொள்ள விரைவில் திருமணம் ஆகும்.அர்ச்சகரிடம் ஒரு எழுமிச்சை , ஒரு மஞ்சள் ,குங்குமம் ஒரு பாக்கெட் கொடுத்து அம்மன் பாதத்தில் வைத்து தரச்சொல்லி அதை வீட்டில் விளக்கு முன்னால் வைத்து விட்டு அந்தக் குங்குமத்தைத் தினமும் மேற்கண்ட மந்திரத்தை 3 தடவை ஜெபித்து நெற்றில் இட்டுக்கொள்ளவும்.

ஸ்ரீஸ்வயம்வரா பார்வதி ஹோமம் செய்யப்பட்ட ஹோமச்சம்பலைத் திருமணத்தடை உள்ளவர் குளிக்கும் நீரில் சிறிது போட்டுக் குளித்து வரத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.             

பூஜிக்கப்பட்ட ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி யந்திரம்,குங்குமம், ஹோமப்  பிரசாதம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். திருமணம் ஆகவேண்டியவர் பெயர்,தகப்பனார் பெயர்,நட்சத்திரம்,ராசி குறிப்பிட்டுத் தனித்தனியாக அவரவர் பெயருக்குச் சங்கல்பம் செய்து பூஜித்துத் தரப்படும்.


வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர்
 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


ஸ்ரீ கணபதி மந்திர ஜபம் 2

ஸ்ரீ கணபதி மந்திர ஜபம் 2:-



1.க்ஷிப்ர கணபதி :-

ஓம்|கம் க்ஷிப்ர ப்ரசாதனாய நமஹ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர எண்ணிய காரியங்கள் காலதாமதமின்றி விரைவில் முடியும்.

2.ஹேரம்ப கணபதி:-

ஓம் கூம் நமஹ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர மனச்சாந்தி உண்டாகும்

3.நிதிகணபதி:-

ஓம் |வக்ரதுண்டாய ஹூம்||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர வறுமை நீங்கும் .தேவைகள் நிறைவேறத் தேவைப்படும் தனம் தடையின்றி வரும் .

4.சங்கஷ்டஹர கணபதி :-

ஓம் |நமோ ஹேரம்ப |மதமோதித|மம சர்வ சங்கஷ்டம் நிவாரய|ஹூம் பட் ஸ்வாஹா||   

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர துன்பங்கள் நீங்கும்.இதனை சங்கடஹரசதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி)அன்று ஆரம்பித்து செய்யவேண்டும்வளர்பிறை சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது அதனால் தோஷம் உண்டாகும்,பல பிரச்சனைகள் வரும்.கிருஷ்ணபரமாத்மாவே அவ்வாறு பார்த்ததனால் பல சங்கடங்களை அனுபவித்தார்.மேற்கண்ட கணபதி வழிபாட்டை தேய்பிறை சதுர்த்தியில் செய்து தன மனக்கவலை நீங்கப்பெற்றார்.நீங்களும் இதை செய்து துன்பம் நீங்கிய வளவாழ்வை வாழுங்கள்.

5.கடன் தீர கணபதி வழிபாடு :-

கீழ்க்கண்ட இரு மந்திரங்களும் கடன் தீர உதவும் சிறந்த மந்திரங்கள்.இரண்டில் எதையும் செய்யலாம்.

ருணஹர கணபதி:-
ஓம் |கணேசாய |ருணம் சிந்தி வரேண்யம்ஹூம் நம பட்||

ருஊநாசன கணபதி:-    

ஓம்|க்லௌம் க்ரோம் கணேசாய|ருணம் சிந்தி வரேண்யம்ஹூம் நம பட்||ஸ்வாஹா || 

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர மலையளவு  கடனும் விரைவில் தீரும்.

கடன் பட்டவர்கள் செவ்வாய் கிழமை மதியம் 12:00 - 1:30 மணிக்குள் கடன் தொகையில் சிறிதளவாவது  திரும்பசெலுத்தினால் கடன் விரைவில் தீரும்.புதன் கிழமை கடனை திரும்பச்செலுத்தக்கூடாது அவ்வாறு செலுத்தினால் கடன் அடையாது கூடிவிடும்.
கிருத்திகை,கேட்டை,பூராடம் நட்சத்திரத்தன்று கடனை திரும்பச்செலுத்த,அடகு வைத்த பத்திரம்,நகை இவைகளை மீட்க திரும்பவும் கடன் வாங்கும் அடகு வைக்கும் சூழ்நிலை வராது.


6.அர்க்க கணபதி:-

ஒம்|நமோ கணபதயே|அர்க்க கணபதே|வரவரத சர்வஜனம் |மே வசமானய ஸ்வாஹா ||   

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர சூர்யன் மற்றும் நவக்ரஹ சாந்தி உண்டாகும்.அதாவது நவக்ரகங்களால் உண்டான தோஷம் விலகும்.   

7.அபீஷ்டவரத கணபதி:-

ஓம்|ஸ்ரீம் ஸ்ரீம் கணாதிபதயே |ஏகதந்தாய |லம்போதராய|ஹேரம்பாய|நாளிகேரப்ரியாய|மோதக பக்ஷணாய|மமாபீஷ்ட பலம் தேஹி |ப்ரதிகூலம் மே நச்யது |அனுகூலம் மே வசமானய ஸ்வாஹா||    

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர எண்ணிய காரியம் சித்தியாகும்.தொடர்ந்த ஜெபத்தின் பலனாக தொட்ட காரியம் எல்லாம் சிறந்து விளங்கும்.


மந்திரங்களை முறைப்படி தீட்சை பெற்று ஜெபிப்பதே நிறைந்தத் பலன்களை தரும்.தொடர்பு கொள்க. 
பூஜிக்கப்பட்ட ஸ்ரீகணபதி யந்திரம் வைத்துப் புஷ்பங்களால் அர்ச்சனை  செய்து வர நிறைந்தபலன் கிட்டும்யந்திரம் தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொள்க.  யந்திரமும் பூஜை முறைகளும் அனுப்பப்படும்.

                                   வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
9442193072  /  9788493072        

ஸ்ரீ கணபதி மந்திர ஜபம் :1

ஸ்ரீ கணபதி மந்திர ஜபம் :1




 51 பிரதான கணபதி மந்திரங்கள் இருக்கின்றன அவற்றில் சில பயனுள்ள பிரயோகங்களை காணலாம்.

1.தருண கணபதி :-

ஓம் |ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம்| நமோ பகவதே நித்ய யௌவனாய |யுவதி ஜன சமா ச்லிஷ்டாய |கணபதயே நமஹ ஸ்வாஹா||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர வியாதிகள் யாவும் நீங்கும்.

2.புத்தி கணபதி

ஓம் |ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர வாக்குவன்மை ,கல்விகேள்விகளில் சிறந்து விளங்குதல் உண்டாகும்.குழந்தைகளுக்கு வித்யாரம்பத்தில் (பள்ளிக்கு அனுப்பும் சமயம்) தேனில் ஜெபித்து நாவில் தடவ நல்ல படிப்பும் ,வாக்குவன்மையும் உண்டாகும்.எழுத்துப்பணி,ரெப்ரசெண்டேடிவ்,ஜோதிடர் போன்ற  வாக்கு        சாதுர்யம் தேவைப்படும் துறையில் உள்ளோர் ஜெபிக்க சிறந்து விளங்கலாம்.


3.சந்தான கணபதி:-

ஓம் |நமோ லக்ஷ்மி கணேசாய |மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர புத்திர பாக்கியம் உண்டாகும்.வெண்ணையில் ஜெபித்து தம்பதிகள் உண்டு வர விரைவில் குழந்தைபாக்கியம் உண்டாகும்.கீழ்க்கண்ட மந்திரமும் இதே பலன் தரும்.

4.திருதாரி சந்தான கணபதி:

ஓம் \ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்\ஓம் |நமோ லக்ஷ்மி கணேசாய |மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா ||


5.துர்கா கணபதி:-

ஓம்|ஹ்ரீம் கம் ஹ்ரீம்|தும் துர்கா புத்ராய|சக்தி ஹஸ்தாய ,மாத்ருவத்சலாய |
மகாகணபதயே நமஹ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர துன்பங்கள் நீங்கும்.விளக்கில் துர்க்கையையும்,கணபதியையும் ஆவாஹனம் செய்து மாதுளம்பழம்,அவல் ,பொரி,கடலை,வெற்றிலை,பழம்,பாக்கு வைத்து விளக்கின் பாதத்தில் குங்குமம் போட்டு ஜெபித்து அந்த குங்குமத்தை இட்டு வர துன்பங்கள் விரைவில் நீங்கும்.

நாளை அடுத்த மந்திரங்களை பார்க்கலாம்

மந்திரங்களைத் தீட்சை  பெற்று ஜெபிப்பது நிறைந்த பலன்களைத் தரும்.
உபதேசம்(தீட்சை),யந்திரம்,பூஜை முறைகள் தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்ட மொபைல்  எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


பூஜிக்கப்பட்ட ஸ்ரீ கணபதி யந்திரம் வைத்துப் புஷ்பங்களால் அர்ச்சனை  செய்து வர நிறைந்த பலன் கிட்டும்.                                                                            யந்திரம் தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்ட மொபைல் எண்ணில் தொடர்பு   கொள்க.  யந்திரமும் பூஜை முறைகளும் அனுப்பப்படும்.

                                   வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M. சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
9442193072  /  9788493072

ஸ்ரீ கணபதி மந்திர ஜெபம்

ஸ்ரீ கணபதி மந்திர ஜெபம் :-




தெய்வங்களிடமிருந்து அருள் பெற நாம் ஸ்தோத்திரம், கவசம், நாமாவளி, மந்திரமங்களைப் பாராயணம் செய்து வருகிறோம்.       நிபந்தனையற்ற ஆழ்ந்த அன்புடன் அழைத்தால் எந்த தெய்வமும் உடனே வந்து அருள் செய்யும்.நமக்கு அந்த  அளவுக்கு அன்பும் பக்தியும் செய்யத் தெரியாததால் நாம் மேற்காணும் வழிகளை பின்பற்றுகிறோம்.மிக விரைந்து பலன் தருவது மூலமந்திர ஜெபமே.

மூலமந்திரங்களை ஜெபிக்கும் போது ஒவ்வொரு மந்திரத்திற்கும்    ஒரு  சில விதிமுறைகள் உள்ளன அவற்றைப் பின்பற்றினால் உயர்ந்த பலன்கிட்டும்.

எல்லாருக்கும் எல்லா மந்திரங்களும் பலிப்பதில்லை.மேலும் தேவையில்லாமல் கண்டகண்ட துர்மந்திரங்களை ஜெபிக்காமல் சாத்வீக மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம்.

முதலில் விநாயக மந்திரத்தைச் சித்தி செய்து கொள்ளவேண்டும்.

எல்லா தெய்வ வடிவங்களுக்கும் ஒரு உயர்ந்த தத்துவார்த்த விளக்கம் உள்ளது.விநாயகருக்கான  விளக்கம்.

1.அவருக்குண்டான தனிப்பெரும் அடையாளம் துதிக்கை அதன் பொருள் மூச்சு ஆழமாக இழுக்கப்பட வேண்டும்.

2.காதுகள்-வலது காதிலிருந்து இடது காது வரை துதிக்கையையும் சேர்த்து உற்று நோக்கினால் ஓம்கார வடிவம்.

3.இருந்த இடத்திலிருந்தே பிரபஞ்ச இயக்கம்,ஜோதிடம்,வைத்தியம் யாவற்றையும் அறிந்த ரிஷி,சித்தர்கள் யானையான விநாயகருக்கு எலியை வாகனமாக ஏன் வைத்தார்கள் என்பதற்குத் தரும் விளக்கம்.எலி எப்போதும் வெளிச்சத்தில் நடமாடுவதோ தங்குவதோ கிடையாது.அதுபோல்   மூலதாரத்திற்கு அதிதெய்வமான  கணபதி எலியின் மேல் அமர்ந்திருப்பது   எலியைப்போல் மனம் இயல்பு நிலையில் அல்லது மூலாதாரச்சக்கரம் செயல்படுகின்றநிலையில் இருள் போன்ற தீய விஷயங்களைப்பற்றியே செயல்படும்.எனவே அதுபோன்ற மாயையில் இருந்து உயர எலியாகிய நம் மனம் கீழேயும்,நம் மூச்சு ஆழமாகவும் இழுக்கப்பட்டு யோக நிலையில் இருந்து நம் வினைக்கு நாமே நாயகனாக இருக்க வேண்டும் என்பதாகும்.


விநாயகருக்கு 51 வகையான வடிவங்கள் உண்டு அதற்கென்றுள்ள  பிரத்யேக மந்திரங்களும் உள்ளன.அவற்றில் நம் விருப்பம் நிறைவேறத்தகுந்த மந்திரங்களையும் அதன்  பிரயோகங்களையும் பார்க்கலாம்.


ஸ்ரீ மகாகணபதி மந்திரம்:-

1.ஓம் ||ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ||க்லௌம் கம் கணபதயே|| வரவரத சர்வ ஜனம் மே|| வசமானய ஸ்வாஹா||

மேற்கண்டவாறு இம்மந்திரத்தை 5 இடங்களில் சிறிது நிறுத்தி ஜெபிக்கவும்.இதனை கிழக்கு முகமாக அமர்ந்து முதல் நாள் 27 முறை பின்னர் 54,108 என்று இயன்றவரை  ஜெபித்துவரவும்.

மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.இம்மந்திரத்திற்கு ரிஷி கனக ரிஷி  .

மந்திர சாஸ்திரத்தின் உயர்ந்த வித்தையான ஸ்ரீ வித்யையில் இதுவே முதல் உபதேசமாக வழங்கப்பட்டு வருகிறது,மேலும் இதுவே  மந்திர சாஸ்திரத்தின் முதல் படி என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் கிட்டும் பிரதான பலன் சத்வகுண சுத்தி எனப்படும் எண்ணத்தூய்மை.தேஜஸ்,செல்வம்,சௌபாக்கியம்,சர்வ ஜீவராசிகளும் மனிதன் உட்பட வசீகரம் ஆகி அதாவது எல்லா உயிர்களுடனும் இணக்கமான உறவு கொண்ட நல்வாழ்வு கிடைக்கப்பெறும்.

இம்மந்திரத்தை பிரம்ம முகூர்த்தத்தில் ஜெபிப்பது 100 % பலன் தரும்.அல்லது இளஞ்சூரியன் உள்ள நேரத்திற்குள் ஜெபிப்பது நலம்.வசதி இல்லாதவர்கள் நேரம் கிடைக்கையில் ஜெபிக்கலாம்

மந்திரங்களை உபதேசம் (தீட்சை) பெற்று ஜெபிப்பதே நிறைவான பலன்களைத் தரும்.
உபதேசம்,யந்திரம்,பூஜை முறைகள் தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்ட மொபைல்  எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


பூஜிக்கப்பட்ட ஸ்ரீ கணபதி யந்திரம் வைத்துப் புஷ்பங்களால் அர்ச்சனை செய்து வரக் காரியத்தடைகள் நீங்கி வளமான வாழ்வு அமையும். நிறைந்த பலன் கிட்டும்.யந்திரம்,ரக்ஷை,குங்கும பிரசாதம் தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.யந்திரமும் பூஜை முறைகளும் அனுப்பப்படும்.


                                   வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
9442193072  /  9788493072